ஐபிஎல் 2023: எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து வாசிம் அக்ரம் கருத்து!
ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. ஆனால், அகமதாபாத்தில் கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐபிஎல் கோப்பையை யார் வெல்வார் என்பது குறித்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கல் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Trending
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்திற்குள் இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். குஜராத் அணி சுப்மன் கில் மற்றும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை நம்பியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் எப்படி மீண்டுவருவது என சென்னைக்கு தெரியும். அமைதியாக இருப்பது எப்படி என சென்னைக்கு தெரியும். பிறருக்கு அவரவர் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் என்னைபொறுத்தவரை இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற 60 சதவிகித வாய்ப்பு உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற 40 சதவிகித வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now