Advertisement

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 08, 2021 • 11:13 AM
CSK announces ₹1 crore to Neeraj Chopra
CSK announces ₹1 crore to Neeraj Chopra (Image Source: Google)
Advertisement

டோக்கியோவில் நடைபெற்று வரும் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். 

அதிலும் தற்போது ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக உள்ள நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்று வரை முன்னேறி தற்போது இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்காக முதல் தங்கத்தையும் பெற்று தந்துள்ளார்.

Trending


இதன் காரணமாக அவருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, காவல் அதிகாரிகள், பல தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர் என அனைத்து தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய மக்களாலும் தற்போது நீரஜ் சோப்ரா வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவிற்காக தங்கத்தை வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் வகையில் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்து அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணியின் சீருடையில் 8758 என்ற எண்ணுடன் பதியப்பட்டு ஒரு சீருடையையும் வழங்குவோம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நீரஜ் சோப்ராவிற்கு பிசிசிஐ-யும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement