
சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று, மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டியில் குறைந்தது 7 ஆட்டங்களில் சிஎஸ்கே வெல்ல வேண்டும்.
சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கான்வேவை வைத்து சிஎஸ்கே தமிழக முறைப்படி திருமண நிகழ்ச்சி எல்லாம் நடத்திய நிலையில் ஏன் இந்த முடிவு என்று ரசிகர்கள் புலம்பினர்.
ஆனால் கான்வேக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை முடித்துவிட்டு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கான்வேக்கு திருமணம் இருப்பதை அறிந்து தான், தோனி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.