
விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி தோல்வியை சந்தித்தாலும், அந்த அணியின் கேப்டனான ருதுராக் கெயிக்வாட் பற்றிய பேச்சுகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தனியாளாக போராடி மகாராஷ்டிரா அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றதுடன், இளம் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கி கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு பின் ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்படுவார் என்று பேச்சுகள் அதிகமாகியுள்ளது. அதற்கேற்ப சென்னை அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, தோனியை போலவே ருதுராஜ் கெயிக்வாட் அமைதியாக சூழலை கையாள்பவர் என்று பாராட்டியுள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாட் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசி கூறுகையில், “சென்னை அணியின் கேப்டன் தோனியை மிக அருகில் இருந்து பார்த்து வருபவர் ருதுராஜ். அவரின் சிறப்பு என்னவென்றால், ருதுராஅஜ் சுயம்பாக முன்னேறியவர். இன்னொரு வீரரிடம் இருந்து எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அதனை மட்டும் சரியாக உள்வாங்கி செயல்படுவார். சென்னை அணியின் அடுத்த திட்டம் என்ன என்பது தெரியவில்லை.