
CSK Captain Dhoni has arrived in Chennai for the 2nd Phase of IPL 2021 (Image Source: Google)
இந்தியாவில் நடப்பாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் அடுத்து, 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
பின் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்து, இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ அறிவித்தது.
இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக்கத்திற்கு செல்லவுள்ளது.