சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டைத் தவிர மற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களில் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை தோனிக்கு உண்டு. இதுவரை 3 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் தோனியின் அதிரடியை காணமுடியவில்லை. எனவே, அவர் இந்தாண்டு ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது.
Trending
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணிக்காக தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடலாம். அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். கடும் பயிற்சிகளை செய்து வருகிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறவேண்டும்?
அவர் ஒரு நல்ல வழிகாட்டி. மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன். எங்களைப் பொறுத்தவரை தோனி இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் அணிக்காக சிறந்த விஷயங்களைச் செய்து கொடுப்பார். மேட்சை வெற்றிகரமாக முடித்துத் தருவதில் சிறந்தவர் அவர். இன்றும் அதையே செய்து வருகிறார்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now