ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, அந்நாட்டில் புதிய டி20 லீக் தொடரை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இந்த தொடர் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் 6 அணிகள் விளையாடவுள்ளன. அந்த 6 அணிகளையும் இந்தியாவின் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் வாங்கியுள்ளனர்.
Trending
அதில் ஜஹன்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தான் வாங்கியுள்ளது. எனவே அந்த அணிக்கு ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டு, சிஎஸ்கே அணியில் ஆடும்/ஆடிய சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரர்களை ஜஹன்னஸ்பர்க் அணி ஏலத்திற்கு முன்னதாக ஒபந்தம் செய்துள்ளது.
ஒவ்வொரு அணியும் ஆரம்பக்கட்டமாக 5 வீரர்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்காக அபரிமிதமான பங்களிப்பு செய்து சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஃபாஃப் டுப்ளெசிஸை எடுத்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது.
டுப்ளெசிஸுடன், மொயின் அலி, மஹீஷ் தீக்ஷனா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபெர்டு, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான ஜெரால்டு கோயட்ஸீ ஆகியோரையும் எடுத்துள்ளது.
ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸும், தலைமை பயிற்சியாளராக ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now