
csk-player-suresh-raina-says-if-ms-dhoni-doesnot-play-next-year-i-will-also-not-play (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமானவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு முன்னாள் கேப்டன் தோனிக்கும் இருக்கும் நட்பு அனைவரும் அறிந்த ஒன்றே.
இவர்கள் இருவரும் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடக்க சீசனிலிருந்தே விளையாடி வருகின்றன. இதனால் சென்னை அணி ரசிகர்களை தோனியை ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் செல்லமாக அழைப்பதும் வழக்கம்.
மேலும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த சில மணி துளிகளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து, தோனி உடனான தனது நட்பை வெளிப்படுத்தியிருந்தார்.