ஐபிஎல் 2023: புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, துபே, ஜடேஜா ஆகியோர் அதிரடியால் சென்னை அணி முதலில் பேட் செய்து 235 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர் சொதப்பினாலும் ஜேசன் ராய், ரிங்குசிங் அதிரடியில் மிரட்டினர். இருப்பினும், அவர்கள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
Trending
இந்த போட்டிக்கு பிறகான புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் தலா 1 இடம் கீழ் இறங்கியுள்ளது. சென்னை அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை முன்னேறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது பெங்களூர் அணிக்கு புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இனி வரும் நாட்களில் பெறும் வெற்றிகள் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைய உதவும் என்று கூறலாம்.
ராஜஸ்தான், லக்னோ, குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தரவரிசை இடங்கள் மாறி வருகின்றன. முன்னாள் சாம்பியன் மும்பை அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.
CSK - The Current Table Toppers!
— CRICKETNMORE (@cricketnmore) April 23, 2023
Full #KKRvCSK Scorecard @ https://t.co/iuvPlX8DED pic.twitter.com/ZssfVmpDbX
ஐபிஎல் தொடர் தற்போது பாதியளவு கட்டத்தை எட்டியுள்ளதால் இனி வரும் ஆட்டங்களில் டாப் 4க்குள் இடம் பெற வேண்டுமென்றால் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அனைத்து அணிகளுக்கும் அவசியம் ஆகும். ஏனென்றால், சம வெற்றியை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெளியேறும் அபாயமும் உள்ளது. தற்போதைய புள்ளிப்பட்டியலில் சென்னை, ராஜஸ்தான், லக்னோ, குஜராத் அணிகள் மட்டுமே பிளஸ் ரன்ரேட்டை வைத்துள்ளனர். மற்ற அணிகள் மைனஸ் நிலையிலே ரன்ரேட்டை வைத்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now