
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் இன்று மோத இருக்கிறது. அதன்படி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இம்முறை கேப்டன் தோனிக்காக கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. அதே வேளையில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை இரண்டாவது பாதியில் இருந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.