Advertisement

மீண்டும் சேப்பாக்கில் தாமதமான ஆட்டம்; காவஸ்கர் சாடல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாய் புகுந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

Advertisement
CSK v LSG match gets slightly delayed due to stray dog on the field!
CSK v LSG match gets slightly delayed due to stray dog on the field! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 03, 2023 • 08:43 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 03, 2023 • 08:43 PM

தோனி தலைமையிலான சென்னை அணி முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. ஆனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது. இந்த சூழலில் இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Trending

இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்களும் ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தில் நாய் புகுந்தது. இதனால் நாயை விரட்ட அங்கிருந்தவர்கள் போராடினர். 3 நிமிடங்களுக்கும் மேலாக நாயை மைதானத்தையே சுற்றி வந்து ரசிகர்களுக்கு மற்றொரு ஆட்டத்தைக் காட்டியது. இதனால் ஆட்டம் தாமதமானது. சில நிமிட போராட்டத்தைத் தொடர்ந்து ஒருவழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின் போட்டி தொடங்கியது. 

எனினும் இந்த சம்பவத்தை பார்த்து சுனில் கவாஸ்கர் கடுப்பாகி விட்டார். இது குறித்து நேரலையில் பேசிய அவர், “கிரிக்கெட்டில் நேரம் என்பது மிகவும் முக்கியம். இது போன்ற நாய் தொல்லையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதை எல்லாம் ஏற்று கொள்ளவே முடியாது. இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தில் யார் இதற்கு பொறுப்பு. இத்தனை பாதுகாப்பையும் மீறி நாய் எப்படி உள்ளே நுழைந்தது” என்று கவாஸ்கர் கடுமையாக திட்டினார். ஏற்கனவே, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியின் போது சென்னை சேப்பாக்கத்தில் நாயால் போட்டி தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement