
CSK v PBKS: 53rd IPL Match Probable Playing XI (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைச் சந்திருப்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் அணியின் தொடக்க வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடததே அந்த அணியின் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.