ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.
இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Trending
இதில் நடப்பு சீசனில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்,
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் தூபே, ரச்சின் ரவீந்திரா, எம்எஸ் தோனி, சமீர் ரிஸ்வி ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான், தீபக் சஹார், மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர். இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் பெரிதளவில் மாற்றம் இருக்காது என நம்பலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
குஜராத் டைட்டன்ஸ்
நடப்பு ஐபிஎல் சீசனை ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே வலிமை வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா இருந்தாலும், ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும், ஸ்பென்சர் ஜான்ஸனின் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஜோஷுவா லிட்டிலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்/ஜோஷுவா லிட்டில், மோஹித் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now