Advertisement

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 08, 2024 • 14:11 PM
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சீசனில் தோல்வியையே கண்டிராத ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

Trending


சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திர போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். மேலும் கடந்த போட்டியில் அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடஜே போன்ற வீரர்கள் ரன்களைச் சேர்த்தாலும், அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

அணியின் பந்துவீச்சு துறையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா ஆகியோர் முக்கிய வீரர்களாக இருந்துள்ளார். ஆனால் கடந்த போட்டியில் இருவரும் விளையாடதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இன்றைய போட்டியிலும் அவர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை. 

சிஎஸ்கே உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த சீச்னில் தோல்வியையே சந்திக்காமல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி நடைபோட்டு வருகிறது. அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோரும் ஃபர்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் மிட்ச்செல் ஸ்டார்க், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தங்களது வேகத்தால் எதிரணிக்கு சவாலை கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படு வருகிறது. இருப்பினும் கடந்த போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ஹர்ஷித் ராணா இப்போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேகேஆர் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement