Advertisement

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2024 • 15:19 PM
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையி இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.

Trending


சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்வி என 8 புள்ளிகளுடன், புள்ளிபட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் உள்ள சிஎஸ்கே அணியில்  தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா இன்னும் தன்னுடைய முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பது  அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், 14 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கிய டேரில் மிட்செல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இருப்பினும் ஷிவம் துபே, கேப்டன் ருதுராஜ், ஜடேஜா, ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்த வரையில் முஸ்தஃபிசூர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவருவது அணிக்கு பெரும் பலமாக இருந்துவருகிறது.

சிஎஸ்கே உத்தேச லெவன்: அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதிஷா பதிரனா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை பொறுத்தவரையில் இத்தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்வி என புள்ளிபட்டியலில் என்று 8 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டாயினிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் குருணல் பாண்டியா, ரவி பிஸ்னாய் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள் எனத் தெரியவருகிறது. அதேபோல், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடமல் இருந்த இளம் வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இந்த போட்டியில் விளையாட வாய்புள்ளதாக தெரிகிறது, இது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்எஸ்ஜி உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்/ மயங்க் யாதவ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement