Advertisement

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 01, 2024 • 14:23 PM
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியான் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிரிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குஇத்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கடந்த போட்டியில் டேரில் மிட்செல் அரைசதம் கடந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அடுத்தடுத்து ரன்களைச் சேர்க்க தடுமாறி வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் சிஎஸ்கே வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர் என்பதை மறந்துவிட முடியாது. அணியின் முக்கிய வீரர்களான மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி வருவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, ஷர்தூல் தாக்கூர் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா

பஞ்சாப் கிங்ஸ்

சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்திருந்தது. மேலும் அதுவரை சொதப்பி வந்த பிர்ஷிம்ரன் சிங் அரைசதம் கடந்தும், ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்தும் தங்கள் பார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. அவர்களுடன் ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மாவும் இருப்பது கூடுதல் பலம்.

அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், பஞ்சாப் அணியின் பந்து வீச்சு வலுவில்லாமல் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் ஆகியோர் இதுரை ஒருங்கிணைந்த செயல் திறனைவெளிப்படுத்தவில்லை. சுழற்பந்து வீச்சில் கூட்டாக 7 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ள ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோரும் தொடர்ச்சியாக சிறப்பான செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன் (கே), ரைலீ ரூஸோவ், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement