Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2024 • 12:13 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2024 • 12:13 PM

நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றை ஏறத்தாழ உறுதிசெய்தாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்க இந்த வெற்றியானது அந்த அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாந்து இனிவுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு சீசனில் விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ருதுராஜ் , டேரில் முட்செல், மொயீன் அலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டாலும் ரஹானே, ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சிலும் மதீஷா பதிரானா, முஸ்தஃபிசூர் உள்ளிட்டோர் இல்லதது அணியில் தோல்விக்கு மிக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய போட்டி உட்பட 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிடும்.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.  அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும், பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ரோவ்மன் பவல், டோனோவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement