Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பது யார்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 25, 2025 • 11:16 AM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 25, 2025 • 11:16 AM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சிந்திக்க முடியும் என்பதால், அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

அணியின் பேட்டிங்கில் ஷேக் ரஷீத், அயூஷ் மாத்ரோ உள்ளிட்ட இளம் வீரர்களுடன் டெவால்ட் பிரீவிஸும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்பதால் நிச்சயம் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பந்துவீச்சில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதீஷா பதிரானா ரன்களைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷேக் ரஷித், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரீவிஸ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி 5 புள்​ளி​களு​டன் 9ஆவது இடத்​தில் உள்​ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சிந்திக்க முடியும் என்பதால், அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் அந்த அணியும் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் அந்த அணி அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசெனையே அதிகம் சார்ந்துள்ளது. அதனால் மற்ற பேட்டர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா என்பதை பொறுத்திருந்து தன் பர்க்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, ஈஷான் மலிங்கா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 15
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 06

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, ரச்சின் ரவீந்திர
  • ஆல்-ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஆயுஷ் மத்ரே
  • பந்துவீச்சாளர்கள் - நூர் அஹ்மத், பாட் கம்மின்ஸ், மதிஷா பத்திரனா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement