
CSK’s IPL win to boost T20’s popularity worldwide, says N Srinivasan of India Cements (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இந்த சாம்பியன் கோப்பையை தற்போது இந்தியா கொண்டு வந்து தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சென்னை அணி நிர்வாகம் பூஜை செய்துள்ளனர். இந்த பூஜையில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், “கடந்த ஆண்டு தோல்வியடைந்ததால் இம்முறை கோப்பையை கைப்பற்ற முடியுமா ? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என்று என்னிடம் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்து உள்ளது.