
ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 99 ரன்களும், கான்வே 85* ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் (47) மற்றும் அபிசேக் சர்மா (39) ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் காட்டடி அடித்த நிக்கோலஸ் பூரணின் (64 ரன்கள்) அதிரடி ஆட்டத்தாலும், ஹைதராபாத் அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தாலும், மிடில் ஓவர்களில் சொதப்பிய ஒரே காரணத்தால் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.