CT2025: கம்மின்ஸ், ஹேசில்வுட் விளையாடுவது சந்தேகம்; சிக்கலில் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Trending
அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்சமயம் அந்த அணியில் மேலும் சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், “காயத்தால் அவதிப்பட்டு வரும் பாட் கம்மின்ஸ் மீண்டும் தனது பந்துவீச்சை தொடங்க முடியாமல் உள்ளார். அதனால் அவர் பந்துவீச வாய்ப்பில்லை, இதனால் இத்தொடரில் அவர் பங்கேற்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் நமக்கு ஒரு கேப்டன் தேவை என்ற சூழலும் உருவாகியுள்ளது.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை உருவாக்குவதற்காக, பாட் கம்மின்ஸுடன் சேர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருடனும் நாங்கள் உரையாடி வருகிறோம். மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பதவிக்கு நாங்கள் தேடும் இருவர் இவர்கள்தான். மேலும் அவர்கள் இருவரும் அந்த பதவிக்கு தகுதியானவர்களும் கூட. மேலும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாகச் செயல்பட்டார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அணியின் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் இருவருக்கும் இடமுள்ளது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டும் முழு உடற்தகுதியை எட்டுவதற்காக கடினமாக போராடி வருகிறார். எனவே அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவ குழு அறிக்கையை பொறுத்து எங்களது அணியை இறுதிசெய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Massive Setback For Aussies Ahead Of The Champions Trophy!#AUSvIND #Australia #ChampionsTrophy #PatCummins #JoshHazlewood pic.twitter.com/MjJGCoSsaL
— CRICKETNMORE (@cricketnmore) February 5, 2025
முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் காயமடைந்தனர். இதில் ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய நிலையில், பாட் கம்மின்ஸ் தொடர் முழுவதுமாக விளையாடினார். ஆனால் அதன்பின் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து இருவரும் விலகினர். இந்நிலையில் தற்போது இருவரும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலுல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதி அணியை அறிவிப்பதற்கு பிப்ரவரி 12ஆம் தேதியே கடைசி நாள் என்பதால் அதற்கு இருவரும் தங்கள் உடற்தகுதியை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை இருவரும் உடற்தகுதியை எட்டாத பட்சத்தில் அவர்களுக்கான மாற்று வீரரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்ய வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now