இரண்டாவது டெஸ்டில் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்; உள்ளூர் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடைய் வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் விளாசிய மார்னஸ் லபுசாக்னே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பாட் கம்மின்ஸ் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசாமலும் இருந்தார்.
இதையடுத்து அவர் இரண்டாவது போட்டியில் விளையாடாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக, ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் லான்ஸ் மோரிஸ் மற்றும் மைக்கேல் நாசர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, “மைக்கேல் நெசர் கடந்த சீசன்களில் வழக்கமான அடிப்படையில் அணியில் இருந்துள்ளார் மற்றும் கடந்த கோடையில் அடிலெய்டில் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து நம்பமுடியாத அளவிற்கு செயல்பட்டு வருகிறார், அதன் காரணமாக அவருக்கு மீண்டும் அணியில் சேர அழைப்பு விடுத்துள்ளோம்.
அந்த வரிசையில் உள்ளூர் போட்டிகளில் சிறந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் மற்றொருவர் லான்ஸ். அவருக்கு உண்மையான வேகம் உள்ளது மற்றும் விக்கெட்டுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் திறமையை உடையர். அதனால் இச்சயமத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது பெரிய அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 24 வயதாகும் லான்ஸ் மோரிஸ், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் தொடரின் 18 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் சாராசரியாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறனையும் பெற்றுள்ளார் என்பதால், இவர் இந்த தொடரில் அறிமுகமாவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now