
செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செஞ்சூரியனில் தென் ஆப்பிரி்க்க அணி சந்தித்த 3ஆவது தோல்வி இதுவாகும். இதற்கு முன் 2 தோல்விகளை மட்டுமே இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி சந்தித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெற்ற 4ஆவது வெற்றியாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களில் தற்போது விராட் கோலி 40 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் சாதனையான 41 வெற்றிகளை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை. 2ஆவது இடத்தில் இருக்கும் பான்டிங் தலைமையில் 48 வெற்றிகளைப் பெற்றுள்ளார்; தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 53 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.