வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இதில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேய்க் யங் ஆகியோர் காயமடைந்ததை தொடர்ந்து இருவரும் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கர்டிஸ் காம்பர் வலைபயிற்சியின் போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், கிரேய்க் யங் உள்ளூர் போட்டிகளின் போது தொடை பகுதியில் காயத்தை சந்தித்தன் காரணமாகவும் தொடரில் இருந்து விலகியதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து அயர்லாந்து ஒருநாள் அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஜோர்டன் நீல் மற்றும் பேட்டர் ஸ்டீபப் தொஹனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து ஒருநாள் அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஜோர்டன் நீல்*, கேட் கார்மைக்கேல், ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், டாம் மேயர்ஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, லியாம் மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஸ்டீபன் தொஹனி*.
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.
Win Big, Make Your Cricket Tales Now