Advertisement
Advertisement
Advertisement

உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத்து!

நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார்.  

Bharathi Kannan
By Bharathi Kannan September 30, 2023 • 12:21 PM
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் எதிர்பார்ப்பான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோது போட்டி இன்று நடக்க இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் பலவிதமான எதிர்பார்ப்புகள் சுவாரசியமான ஒன்றாக மாறியிருக்கின்றன.

இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடக்கின்ற காரணத்தினால் வேகப்பந்து வீச்சை விட சுழற் பந்து வீச்சுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். எனவே பங்குபெறும் 10 அணிகளும் தங்களது பவுலிங் யூனிட்டில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன. இதன் காரணமாகவே ஆசிய அணிகளான வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் யாரையாவது முக்கிய அணிகளை வீழ்த்தி ஆச்சரியம் தரும் என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

Trending


அதேவேளையில் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய சாதகங்கள் இல்லை என்கின்ற நிலை வரும் பொழுது, இங்கு பெரிய வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படக்கூடியவர்கள், ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பார்கள். இந்த நிலையில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்று தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் ஐந்து வேகபந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தி இருக்கிறார். அதில், இந்திய அணியின் முகமது சிராஜ், தென் அப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி, நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், இங்கிலாந்து அணியின் மார்க் வுட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இவரது பட்டியளில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா, ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement