Advertisement

உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஓமனுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!

ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
CWC 2023 Qualifiers: Aayan Khan's quickfire fifty has given UAE a fighting total!
CWC 2023 Qualifiers: Aayan Khan's quickfire fifty has given UAE a fighting total! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2023 • 04:29 PM

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.   

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2023 • 04:29 PM

இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு முகமது வசீம் - ரோஹன் முஸ்தஃபா இணை களமிறங்கினர். இதில் இருவரும் தலா 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த விருத்தியா அரவிந்த் - ரமீஸ் ஷஜாத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அரவிந்த் 49 ரன்களிலும், ஷஜாத் 38 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய அசிஃப் கான் 27 ரன்களிலும், பசில் ஹமீத் 8 ரன்களிலும், அலி நெசர் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஃப்சல் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 227 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் ஜெய் ஒடெட்ரா 3 விக்கெட்டுகளையும், பிலால் கான், ஃபையாஸ் பட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement