Advertisement

உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!

அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
CWC 2023 Qualifiers: Nepal wins the match against USA by 6 wickets in ongoing CWC Qualifiers!
CWC 2023 Qualifiers: Nepal wins the match against USA by 6 wickets in ongoing CWC Qualifiers! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 20, 2023 • 08:33 PM

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து எதிரணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 20, 2023 • 08:33 PM

அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு டெய்லர் மற்றும் மதானி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெய்லர் 4 ரன்களிலும், முக்காமல்லா ரன்கள் ஏதுமின்றியும், ஆரன் ஜோன்ஸ் 2 ரன்களிலும்,கென்ஜிகே 1 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். கடந்த போட்டியில் சதமடித்த கஜானந்த் சிங் இப்போட்டியில் 26 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Trending

அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மதானி 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க 94 ரன்களுக்கே அமெரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷயான் ஜஹாங்கீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஹாங்கீர் 79 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் கள்மைறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 49 ஓவர்களிலேயே அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஜஹாங்கீர் 100 ரன்களை எடுத்து இறுதிவவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டல் - ஆசிஃப் ஷேக் தொடக்கம் கொடுத்தனர். இதில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஆசிஃப் ஷேக் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப மறுமுனையில் இருந்த குஷால் புர்டலும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய பிம் ஷார்கி ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெள்ப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் 16 ரன்களிலும், குசால் மல்லா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷார்கியுடன் இணைந்த திபேந்திய சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷார்கியுடன் அரைசதம் கடந்துடன் 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நேபாள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது .

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement