
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அண்டி மெக்பிரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 24 ரன்களில் ஆண்டி மெக்பிரையன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிர்னியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். அதேசமயம் மறுபக்கம் கேப்டன் பால்பிர்னி 66 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிஙும் 8 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் 162 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.