
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்று ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் - ஆண்டி மெக்பிரைன் இணை களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு முதல் ஓவரிலேலே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் அண்டி பால்பிர்னி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழது ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை தாக்குப்பிடித்த ஆண்டி மெக்பிரையனும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அயர்லாந்து அணி 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்யது. அதன்பின் ஜோடி சேர்ந்த கர்டிஸ் கேம்பர் - ஜார்ஜ் டக்ரெல் இணை போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.