
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று ஜிம்பாப்வேவில் தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அண், அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்ததது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மெயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜான்சன் சார்லஸ் - ஷாய் ஹோப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.