
உலகக் கிரிக்கெட்டில் 70, 80களில் மிகப்பெரிய ஆதிக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி நிலைநாட்டி இருந்தது. முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை அவர்களே வென்றார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஒருங்கிணைத்து அப்போதைய கேப்டன் கிளைவ் லாயிட் ஒரு சாம்பியன் அணியைக் கட்டியிருந்தார். அவருக்குப் பிறகு விவியன் ரிச்சர்ட்ஸ் அணியைக் கொண்டு சென்றாலும் பழைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியவில்லை.
பிறகு மெல்ல மெல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விழுந்தது. இதற்கடுத்து மாடர்ன் கிரிக்கெட் காலத்தில் டேரன் சமி வந்து அணி வீரர்களை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து, இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றார். ஆனால் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறியது.
மேலும் அடுத்த நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் பிரைன் லாரா காலத்தில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த கார்ல் கூப்பர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிலையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.