
2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்றது . பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதோடு இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன .
இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 23 ரன்களிலும், சமரவிக்ரமா 19 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சஹான் ஆராச்சிகே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஆராச்சிகே 57 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 36 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.