
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கும், விக்ரம்ஜித் சிங் 25 ரன்களுக்கும், முசா அஹ்மத் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன திரும்பினர்.
பின்னர் இணைந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் - நோஹா கிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த நோஹா கிராஸ் 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷரிஸ் அஹ்மத் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்காட் எட்வர்ட்ஸும் 72 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கனடா அணி தரப்பில் கலீம் சனா 4 விக்கெட்டுகளையும், திலன் ஹெய்லிகர், ஹர்ஷ் தாகெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - தில்ப்ரீத் பஜ்வா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஆரோன் ஜான்சன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரகத் சிங் 5 ரன்களிலும், தில்ப்ரீத் பஜ்வா 20 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹர்ஷ் தாகெர் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.