பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது மிக்கியமானது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானதென மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகாளில் இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4ஆம் இடம் பிடித்தது. பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியதுடன், அவர்களுக்கு பிரதமர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு விருந்து அளித்தார்.
மகளிர் கிரிக்கெட் இந்தாண்டு காமன்வெல்த்தில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது. ஆனாலும் வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஹர்மன்ப்ரீத் பிரதமர் அளித்த விருந்தில் கலந்துக் கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது. பிரதமர் மோடி எங்களிடம் பேசும்போது ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக இருந்தது. அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now