கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் டேல் ஸ்டெயின்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகப் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தற்போது 38 வயதாகும் ஸ்டெயின், இதுநாள்வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெயின், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 2019 ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் தெரிவித்தார்.
Trending
ஆனால் அத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெறுகிற நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெயின் இன்று அறிவித்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் டேல் ஸ்டெய்ன், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கரோனா சூழல் காரணமாக அவரால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வேறு எந்தச் சர்வதேச ஆட்டங்களிலும் விளையாட முடியாமல் போய்விட்டது.
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ள டேல் ஸ்டெயின், 2,343 நாள்களுக்கு நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக தனி மகுடந்ததையும் சூடினார்.
மேலும் 2008ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் டேல் ஸ்டெயின், இதுவரை 95 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சார்பாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்நிலையில் தனது அறிக்கையில், “கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு கிரிக்கெட் அனுபவங்களை எதிர்கொண்டுள்ளேன். பல நினைவுகள் உள்ளன. பலருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். இன்று அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். மகத்தான பயணம். அனைவருக்கும் நன்றி” என ஸ்டெயின் கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now