ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியுடன் இணைந்த வாஷி, ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அணியின் பயிற்சி முகாமிற்கு நேற்று வந்தடைந்தார்.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரான், , நடராஜன் ஆகியோர் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சி முகாம்க்கு புவனேஸ்வர் குமார், வாசிங்டன் சுந்தர், டேல் ஸ்டெயின் ஆகியோர் வந்தடைந்தனர்.
Trending
அப்போது, வீரர்களை வரவேற்று பேசிய டாம் மூடி, “வாசிங்டன் சுந்தர் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி. புவனேஸ்வர் குமார் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரர். இன்னொரு ஜாம்பவான் நம்முடன் இணைந்துள்ளார். ஆனால் விளையாடுவதற்கு அல்ல பயிற்சி அளிக்க” என்று ஸ்டெயினை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
ஸ்டெயின் வருகை, ஐதராபாத் அணிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும். அவருடன் பயிற்சி எடுப்பதன் மூலம் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், கார்த்திக் தியாகி ஆகியோர் தங்களது திறனை வளர்த்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதே போன்று பேட்டிங் பயிற்சியாளராக பிரைன் லாரா செயல்படுகிறார்.
இதன் மூலம் அப்துல் சமத், ராகுல் திரிபாதி, அபிசேக் சர்மா, பிரயாம் கார்க் ஆகியோர் நல்ல பயன் பெறுவார்கள். ஐதராபாத் அணி வார்னர் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் இழந்தாலும் பெரும்பாலும் இளம் வீரர்களை களம் காண்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now