ஐபிஎல் தொடரில் எப்போது 300 ரன்கள் அடிக்கப்படும் - டேல் ஸ்டெயின் கணிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை எட்டும் என்பதற்கான கணிப்பினை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகள் உடைக்கப்படுவதுடன், சில புதிய சாதனைகள் படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதில் மிக முக்கியமாக நடப்பு ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கெற்ற வகையிலேயே தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களைக் குவித்து அசத்தியது. இருப்பினும் அந்த அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் 300 ரன்களை அடிக்கும் வாய்ப்பினை அந்த அணி தவறவிட்டது.
Trending
இதனால் நிச்சயமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்களை நிச்சயமாக எட்டும் என்ற எதிர்பார்ப்புகளுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி 300 ரன்களை எட்டும் என்பதற்கான கணிப்பினை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். மேலும் அவர் இதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 ஆம் தேதி ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம். யாருக்குத் தெரியும், ஒருவேளை நான் அதைப் பார்க்க அங்கே இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். டேல் ஸ்டெயினின் கணிப்பின் படி ஏப்ரல் 17ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஏற்கெனவே இதற்கு இவ்விரு அணிகளும் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்திருந்தது.இதில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் 17 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இந்நிலையில் தான் டேல் ஸ்டெயின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now