
இந்திய அணியின் அதிவேக பந்துவீச்சாளராக அறியப்பட்டவர் உம்ரான் மாலிக். ஜம்மூ-காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது அபார வேகம் மற்றும் விக்கெட்டை வீழ்த்தும் யார்க்கர்களுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
மேற்கொண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்காக இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 26 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் ஏலத்திற்கு முன்னரே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உம்ரான் மாலிக்கை விடுவித்தது.
அதன்பின் வீரர்கள் மெகா ஏலத்தில் உம்ரான் மாலிக்கை அவரின் அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்த நிலையில், காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.