Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட் வேண்டும் - டேல் ஸ்டெயின்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும், அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார்.

Advertisement
Dale Steyn suggests introduction of free hit in Test cricket
Dale Steyn suggests introduction of free hit in Test cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 13, 2022 • 10:47 AM

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது அந்நாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸனை வெறுப்பேற்றும் வகையில் அவருக்கு பவுன்ஸராக வீசி பும்ரா தவறான செயலில் ஈடுபட்டார். அதாவது ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசுவதற்குப் பதிலாக வேண்டுமென்றே க்ரீஸுக்கு வெளியே காலை வைத்து நோ-பால் வீசி ஓவருக்கு தேவையான பந்துகளை அதிகப்படுத்தி பவுன்ஸராக வீசி ஆன்டர்ஸனை வெறுப்பேற்றினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 13, 2022 • 10:47 AM

அதே செயலையும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஜேஸனுக்கு எதிராகவும் பும்ரா செயல்படுத்தினார்.
இதைச் சுட்டிக்காட்டியே டேல் ஸ்டெயின் நோ-பாலுக்கு ப்ரீ ஹிட் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Trending

இது தொடர்பாக டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஓவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக இது உதவுமா.

டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்கள் டாப்-கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம். அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி ஸ்வரஸ்யமாக விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement