Advertisement

பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

Bharathi Kannan
By Bharathi Kannan November 07, 2022 • 11:26 AM
Danushka Gunathilaka Was Moments Away From Leaving For Sydney Airport When He Was Dragged Out Of Tea
Danushka Gunathilaka Was Moments Away From Leaving For Sydney Airport When He Was Dragged Out Of Tea (Image Source: Google)
Advertisement

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

Trending


இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என சிட்னி காவல்துறை கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் குணதிலகாவை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம், நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தனுஷ்கா குணதிலகா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமா? என்ற சந்தேகம் எழும்பி உள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement