
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால் இதில் இருமுறை உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெறவில்லை.
அதனால் அந்த அணி தற்போது உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடி, அதில் தகுதிப்பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றில் அந்த அணியால் விளையாட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முன்னாள் கேப்டன் டேரன் சமியை அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஆண்ட்ரே கோலேயை டெஸ்ட் போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.