Advertisement

தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்! 

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Advertisement
Dasun Shanaka Has Been Disappointing In IPL 2023 - Virender Sehwag!
Dasun Shanaka Has Been Disappointing In IPL 2023 - Virender Sehwag! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2023 • 08:32 PM

2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன . சென்னையில் நடைபெற்ற முதலாவது தகுதிக்கு பிறகு போட்டியில் குஜராத் அணி சிஎஸ்கே அணி இடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . இரண்டாவதாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது .

Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2023 • 08:32 PM

இன்று நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லீக் சுற்று ஆட்டங்களில் பலமான அணியாக பலம் வந்த குஜராத் பத்துப் போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குஜராத் . சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் 172 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 157 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது

Trending

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதுவரை குஜராத் அணிக்காக மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை . இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் விரேந்தர் சேவாக் .

இதுகுறித்து பேசிய அவர், “ஷனகாவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தோம் அவரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது . அந்த எதிர்பார்ப்பில் ஒரு சதவீதத்தை கூட அவர் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் . இந்தப் போட்டியில் அவரை நீக்கிவிட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓடியன் ஸ்மித் அணியில் இடம்பெற வேண்டும் எனவும் சேவாக் தெரிவித்திருக்கிறார் .

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தசுன் ஷனகா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தார் . இந்தத் தொடரில் மாற்று வீரராக குஜராத் அணி அவரை தேர்வு செய்தது . சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement