
இன்னும் சில தினங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் கோப்பையை வெல்லவதற்காக அனைத்து அணிகளிலும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,ஜக் காலிஸ், எபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் போன்ற கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பல வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு கிடைத்திருந்தாலும், தென் ஆப்ரிக்கா அணியால் இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் தென் ஆப்ரிக்கா அணி வலுவான அணியாக இருந்தாலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருவதால் அந்த அணியை ரசிகர்கள் “சோக்கர்ஸ்” என கிண்டல் செய்வது வழக்கம்.
அந்த அளவிற்கு உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறது. இந்த முறையாவது உலகக்கோப்பை தொடரை தென் ஆப்ரிக்கா அணி வெல்ல வேண்டும் என முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரர்கள் மற்றும் தென் ஆப்ரிக்கா ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த முறை தென் ஆப்ரிக்கா அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என அந்த அணியின் நட்சத்திர வீரரான டேவிட் மில்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.