
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில், தான் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றுள்ளார். இன்று நடக்கும் 34ஆவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. இதில் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார்.
David Warner Has Arrived in a helicopter at the SCG for Sydney Thunder's clash against Sydney Sixers #Cricket #BBL #Australia #DavidWarner
— CRICKETNMORE (@cricketnmore) January 12, 2024
pic.twitter.com/1B2pDk2evQ