பிபிஎல் 2024: சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் அதிகராப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் சமீபத்தில் கூறினார்.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்காக விளையாட தடையும் பெற்றார். இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது.
Trending
இதனால் கேப்டன் பதவியை இழந்த இருவரும் ஒருவருட தடைக்கு பிறகு அணியில் சாதாரான வீரராக மட்டுமே பங்கேற்று வந்தனர். இதில் இந்தாண்டு தொடக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் தடை நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வபோது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆதேசமயம் மறுபக்கம் டேவிட் வார்னர் மீதான தடையானது தொடர்ந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் நீக்கியுள்ளது.
இதன்மூலாம் டேவிட் வார்னர் இப்போது எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் சிலா தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிவரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இருந்து வார்னர் மீண்டும் கேப்டனாக தொடரவுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
சிட்னி தண்டர் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்)வெஸ் அகர், கேமரூன் பான்கிராஃப்ட், சாம் பில்லிங்ஸ், ஒலிவர் டேவிஸ், லோக்கி ஃபெர்குசன், மாட் கில்க்ஸ், கிறிஸ் கிரீன், லியாம் ஹாட்சர், சாம் கான்ஸ்டாஸ், நிக் மேடின்சன், நாதன் மெக்ஆண்ட்ரூ, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், வில்லியம் சால்ஸ்மான், டானியல் சாம்ஸ்மான், ஜேசன் சங்கா, தன்வீர் சங்கா
Win Big, Make Your Cricket Tales Now