
David Warner becomes first batsman to smash 50th fifty in IPL, completes 200 sixes (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசனில் நேற்றிரவு நடந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின.ன் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை புரிந்துள்ளார். தனது 148வது போட்டியில் விளையாடி ஐபிஎல் தொடரில் தனது 50ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியில் 40 ரன்களை கடந்த டேவிட் வார்னர், டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார்.