
டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களாகவும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் சில வீரர்கள் தான் திகழ்கின்றனர். அவர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் அதிகம்.
பொல்லார்டு, பிராவோ, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோர் சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் உட்பட பல டி20 லீக் தொடர்களில் ஆடியதன் விளைவாக அதிக டி20 போட்டிகளில் ஆடியதுடன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர்.
பேட்டிங் ரெக்கார்டு பெரும்பாலும் கெய்ல் தான் வைத்துள்ளார். அந்தவகையில் டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் தொடர்கள்) 88 அரைசதங்களை விளாசிய கெய்ல் தான் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரராக திகழ்ந்தார். இவரை டேவிட் வார்னர் சமன் செய்திருந்த நிலையில், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸூக்கு எதிராக அரைசதம் அடித்து கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார்.