‘வாத்தி கம்மிங்’ இது வார்னர் வெர்ஷன் - இணையத்தை கலக்கும் கணொளி!
டேவிட் வார்னர் மட்டுமின்றி அவரது மகள்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் அமீரகத்தில் ஒன்றிணைந்து வருகிறது.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள எந்தவித சிக்கலும் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியிருந்தது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், கரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த டிக்டாக் காணொளிகள் பெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாக இந்திய பாடல்கள், மற்றும் திரைப்பட காட்சிகளுக்கு டிக் டாக் செய்து இந்தியர்களின் மனதை வென்றார்.
தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வரும் டேவிட் வார்னர், சமீபத்தில் தனுஷின் ரவுடி பேபி, ராமுலோ ராமுலா போன்ற பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளியில், டேவிட் வார்னரின் மகள் இரண்டு பேர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் டிக்டாக்கில் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, வார்னரும் ஏற்கனவே இந்த பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். தற்போது அவரின் மகள்கள் விஜய் ரசிகர்களைகளாக மாறியுள்ளனர்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அந்த பாடலில் நடிகர் விஜய் போடும் அதே டான்ஸ் ஸ்டெப்புகளை போன்றே வார்னரின் மகள்களும் முயற்சி செய்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு குழந்தைகளும் மிக அழகாக நடனமாடுகிறார்கள் என ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now