
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களை சாய்த்தார்.
மேலும் 40 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டியில் தண்ணீர் இடைவேளையின் போது டெல்லி மைதானத்தில் ராட்சத மின்விளக்குகள் அணைக்கப்பட்டு வண்ணமயமான லேசர் விளக்குகள் நிகழ்வு நடைபெற்றது.