
David Warner's Wife, Kids 'Grateful' To See Him Back Home (Image Source: Google)
பயோ பபுள் பாதுகாப்பு சூழலில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில், வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். அங்கும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பியுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குறித்து அவரது மனைவி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,“இந்தியாவிலிருந்து டேவிட் வார்னர் வீடு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.